உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

20

யான முறைப்படி பதிவானால் போதும். தம்பீ! இக்கடிதத்தை என் பூர்ண எண்ணத்துடன் எழுதுவதால், இதையே நீ உயிலாக எண்ணிக் கொள்; எந்தக் காலத்திலும், எந்தச் சமயத்திலும் இதைப் பற்றி நான் எவ்வித கேள்வியும் கேட்க மாட்டேன். இது சத்யம். என் மனோபீஷ்டம் நிறைவேறி, நான் எதிர்பார்க்கும் சாந்தியின் சிகரத்தில், என்னைச் சேர்ப்பதற்கு இனி எந்தவிதமான தடையும் இல்லை என்று எண்ணுகிறேன். நீ சகலவித ஸௌபாக்யங்களுடனும், சந்தான சம்பத்துக்களுடனும் க்ஷேமமாயிருக்க பகவானை வேண்டுகிறேன். மறுமுறையும் சொல்கிறேன்: ஒரு செல்லாத காசுகூட எனக்கு வேண்டாம். நான் விரோத பாவத்துடன் இதைச் சொல்லவில்லை. இதய பூர்வமாய்ச் சொல்கிறேன். இதற்குச் சாட்சி ஆண்டவனே !

⁠இங்ஙனம்,
உன் க்ஷேமத்தைக் கோரும் அண்ணா,
⁠டாக்டர் ஸ்ரீதரன்”

என்பதை வெகு விரைவில் எழுதி, ஒரு முறை படித்துப் பார்த்துப் பின் தன் தாயாரிடம் கொடுத்து, “அம்மா! இதைப் படித்துப் பாரம்மா!” என்று வினயமாய்க் கூறினான். கமலவேணியம்மாளும் பரபரப்புடன் படிக்கத் தொடங்கினாள்.

தன் காலில் முதலில் டாக்டர் விழுந்து நமஸ்கரித்த போது, அவன் மனம் மாறி விட்டதாயும், தான் விவாகம் செய்து கொள்வதாய்ச் சொல்லப் போகிறான் என்னும் எண்ணம் மின்வெட்டுப் போல், பளிச்சென்று தோன்றி, ஒரு க்ஷணத்திற்குள் ஏதேதோ எண்ணங்களாகிய அலைகள், இதயக் கடலில் கொந்தளிக்க வாரம்பித்தன. எந்தப் பெண்ணைத் தேடி, விவாகத்தைச் செய்து வைக்கலாம்? என்று கூட யோசனை உண்டாகிப் புதிய உணர்ச்சி வயப் பட்டுள்ள அடுத்த க்ஷணமே இந்தக் கடிதத்தைப் படித்த-