உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

22

னம்?… உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிறு குளிரச் செய்ய உனக்கு மனமில்லையா? பாலூட்டி வளர்த்த தாயின் வயிற்றில், பாலை வார்க்க நீ ப்ரியப்படவில்லையா? எத்தனை வேதாந்தம் பேசினாலும், அதுவும் வாழ்க்கைக்கு ஒரு சிறிது வேண்டியதுதான். எனினும், அதற்காக உன் குடும்பம் கிளைத்துச் செழித்து, இம்மைக்கும, மறுமைக்கும் ஸார்த்தகத்தைத் தேடிக் கொள்ள வேண்டாமா?…

என்று தனது உணர்ச்சிக் கனலை அள்ளி வீசி, மெஷின் போல் சொல்லும் வார்த்தைகள் எதற்கும் டாக்டர் பதிலே பேசாமல், சிலை போல் கைகளைக் கட்டி நிற்கிறான். அந்த ஹாலில் மாட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், மகாத்மா காந்தி அடிகள், ஸ்ரீராமாநுஜர், சங்கரர், பட்டினத்தார் முதலிய மகான்களின் படங்கள் மீதே அவன் கண்கள் சென்று லயித்திருப்பதைக் கண்ட கமலவேணி உள்ளம் கதி கலங்கியது!… “ஸ்ரீதர்! என்ன பார்க்கிறாய்?… என்று வருத்தம் தேங்கிய குரலில் கேட்டாள்.

ஸ்ரீதர:- தாயே! அந்த மகான்களைப் போல் த்யாகத் தீயில் குளித்துப் புனிதமான தொண்டாற்றி, அப்பழுக்கற்ற பேரின்ப நிலையை அடைந்து, உள்ளம் பூரித்துச் சாந்தியின் சிகரத்தில், ஆனந்த வாழ்க்கையை நடத்தவே பார்க்கிறேன்…

“என்ன என்ன!… சன்யாசியாகவா? துறவியாகவா? …ஸ்ரீதர்! உன் பெற்ற தாயின்…”

“அம்மா! உன்னை அரை க்ஷணமும் விட்டுப் பிரியவே மாட்டேன். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையை வளர்க்கப் பெரும் உதவி புரிந்த ச்ரவணன் கதையைப் போல், உன்னை நான் என் சிரசில் சதா தூக்கித் தாங்கிக் காப்பாற்றுவேன். அநித்யமான உலக பாச பந்தங்களில் உழன்று ஆத்மஹத்தி செய்து கொள்வதற்கொப்பான