பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சான்றோர் தமிழ்

1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.

“காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக்
கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி
மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ
மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும்
மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ
விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங்
காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக்
கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”

-பொதுமை வேட்டல்

என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.

1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறிஸ்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒலி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின்