பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

113

வாகும். கண்ணொளி மங்கிய நேரத்தில் அவர் கருத்தொளி மிகுந்திருந்தது; புறவொளி பாழ்பட்ட நேரத்தில் அகவொளி அமைதியில் பிறங்கிற்று எனலாம். இதனை அவரே,

“கண்ணொளி பட்டதும் கருத்தொளி முன்னிலும்
மேலும் விளங்கலைச் சாலத் தெளிந்தேன்;
ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலம் விளக்கம்
அதிகம் அடைதலின் அதிசயம் இல்லை”

-முதுமை உளறல்

என்று புலப்படுத்தியுள்ளார்.

அவர் உயிர் நீப்பதன் முன்னர் 1953ஆம் ஆண்டில் இயற்றிய நூல்-இறுதி நூல்-‘வளர்ச்சியும் வாழ்வும்’ என்பதாகும். இந்நூலில் அவர்தம் நைந்த உள்ளத்தினைக் காணலாம்.

“மக்கள் வளர்ச்சியில் சிக்கல் உறுதலென்?
பகுத்தறி வுடைய வகுப்போ காரணம்?
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் தளர்ச்சி யடைநதது;
மனிதன் என்றோ சலித்து விட்டான்;
காலங் கணித்துக் கோலல் அரிதே
எத்தனை யுகமோ? எத்தனை ஊழியோ?
இன்னும் அவன் வாழ் தொன்மை உலகம்
தெய்வ மயமாய் உய்ய வில்லை
சாந்தம் முற்றும் ஏந்த வில்லை
என்ன காரணம்? உன்னிப் பார்க்க:
மனிதன் முதன்முதல் இனிது வாழ்ந்தான்
உழைத்தும் உழுதும் பிழைத்து வந்தான்
ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
கல்வி பயிலாச் செல்வம் பெற்றான்
பொய்யும் அற்ற மெய்யில் நின்றான்
சுரண்டல் வாழ்வில் புரண்டா னில்லை,
பின்னே கெட்டான்; என்ன செய்வது,