பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுவை தந்த புரட்சிக் கவிஞர்

119

பிரிந்து, பொருள் முற்றித் தம் மனை நோக்கி மீளும்போது நிலவைக் காண்கிறான். பின் வருமாறு பாடுகிறான்.

“குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லனோ யானே......
........................................................
எமது முண்டோர் மதிநாள் திங்கள்”

—நற்றிணை : 62.

இதுபோன்றே திருவள்ளுவம் காமத்துப்பாலில், தலை மகன்-ஒருவன் நிலவை நோக்கி, நின் முகமும் என் தலைவி யின் முகமும் அழகு-அமைப்பு-கவர்ச்சி முதலியவற்றில் ஒன்றேயெனலாம், ஆயினும் இருவரிடையிலும் ஒரு வேறு பாடு உளது என் தலைவி நான் காணமட்டுமே தோன்று வாள்; நீயோ பலரும் காண நாணமின்றி வான வீதியில் உலா வருகின்றாய்' என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

“மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி”

—திருக்குறள் : 1119.

நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து,

“பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுன காகாதே!”

—நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல்.

என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை: