பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்

27

“1914-ஆம் வருஷத்தில் வெளிவந்த இந்நூலின்
முதற் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்
பெற்றன. இந் நூலைத் தமிழ் மக்கள் பலரும்
விரும்பியதால் அவ்வாயிரம் பிரதிகளும்
விரைவில் செலவாய் விட்டன. அதனால் இந்
நூலை இரண்டாம் முறை அச்சிட்டு முடித்தேன்.”

மேலும் அவர்,

“இப்பதிப்பின் தமிழ் நடையைச் சென்னைப்
பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தி
யகூடிகர் ஸ்ரீமான் தி. செல்வக்கேசவராய முதலியார்
(எம்.ஏ.) அவர்கள் அழகுபடுத்தித் தந்தார்கள்.”

என்றும் குறிப்பிட்டுள்ளது கொண்டு, திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களிடம் வ.உ.சி. கொண்ட மதிப்பும் நூல்களைத் திருத்தமுறப் பதிப்பிக்க வேண்டும் என்று அவர் கொண்ட ஆர்வமும் புலனாகக் காணலாம்.

அடுத்து இவர் ஜேம்ஸ் ஆலனின் மற்ற நூல்களைச் ‘சாந்திக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் தகவுடன் தர வ.உ.சி. கொண்டிருந்த வற்றாத ஆர்வத்தினை இந்நூல்கள் வழிக் காணலாம்.

2. படைப்பிலக்கியப் பணி

அறத்தின் வழிப்பிறழாத நெஞ்சினர் வ.உ.சி. திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர்; குறள் வழியே தம் வாழ்வை நடத்தி நின்றவர். அறத்தான் வருவதே