பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சான்றோர் தமிழ்

மக்களின் ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ் மக்கள் படியாததற்கு ஒரு காரணம், இந் நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன், இந்நூலைத் தமிழ் மக்கள் யாவரும் கற்கும்படி எளிய நடையில் ஓர் உரை எழுதவேண்டுமென்று நினைத்தேன். உடனே எழுத்ததிகாரத்தின் முதற் சில இயல்களுக்கு உரையும் எழுதினேன்......... (பின்னர்) இளம் பூரணத்தை யான் படித்தபோது, அதன் உயர்வும் சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன.”*

இப்பகுதி கொண்டு வ.உ.சி. தமிழுக்கு-தமிழருக்குச் செய்ய நினைத்த தொண்டும், உரையாசிரியர் எனப் பண்டையோரால் சிறப்பித்துக் குறிப்பிடப்பெறும். இளம்பூரணரிடத்து அவர் கொண்டிருந்த மதிப்பும் புலனாகும். 1935ஆம் ஆண்டில் அதாவது தாம் இறப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர்த் தொல்காப்பியம் இளம்பூரணத்தினை இவர் வெளியிட்டார். ஆயினும், 1920இல் இவர் தொடங்கிய தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல், இளம்பூரணர் உரைப்பதிப்பு 1928ஆம் ஆண்டு கோவில் பட்டியில் இவர் இருந்தபொழுது வெளியிட்டுள்ளார். அடுத்து 1933ஆம் ஆண்டில் இளம்பூரணம் களவியல், கற்பியல் பொருளியல் பதிப்பு வெளிவந்தது, இதனையடுத்து 15-1-1936 தேதியிட்டு இளம்பூரணம் மெய்ப்


*சிதம்பரம் பிள்ளை வ.உ , தொல், இளம்பூ. பொருள். பதிப்புரை 1935, பக். 1.