பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்

33

பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல்கள் பதிப்பு வெளியாகியுள்ளது. இப்பதிப்புப் பணிக்குப் பேருதவி புரிந்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை என்பது.


“இவ்வேழு இயல்களுக்குப் பெயரளவில் பதிப்பாசிரியன் நான். உண்மையில் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது”

என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு அறியலாம்.

இதனால் வ.உ.சி.யின் செய்நன்றியறிதலின் திறமும், அடக்கப் பண்பும் புலனாதல் காணலாம். இளம்பூரணத்தின் பெரும் பகுதியினைப் பதவுரையுடன் வெளியிட்ட சிறப்பு வ.உ. சி.யைச் சாரும்.

“The book represent the fruitful results of his (V.O.C.) ardous labours in the field carried on for more than three decades.”

என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலின் பதிப்புரையின் நூல் வெளியீட்டு நிறுவனத்தார் திரு. வெங்கடேச சாஸ்துருலு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “இன்னிலை”க்கு எளிய இனிய உரையெழுதிப் பதிப்பித்துள்ளார்.

திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர் வ.உ.சி. என்பதனை முன்னரே கண்டோம். ‘அகமே புறம்’ எனும் ஜேம்ஸ் ஆலன் நூலின் மொழிபெயர்ப்பில் திருக்குறளை மேற்கொள் காட்டியுள்ளார் என்பது எண்ணற்பாலது. திருக்குறள் மணக்குடவர் உரையை அறத்துப் பாலிற்கு