பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி

53

பற்றிய குறிப்பு சிறு பாணாற்றுப்படையில் இடம் பெற்றிருக்கக் காணலாம். [1] தொட்டிலில் படுத்துக் கிடக்கும் குழந்தை, தன்னைப் பார்த்துத் தொட்டிலை ஆட்டிக் கொண்டு தாலாட்டுப் பாடும் தாயின் வாய் அசைவினை நோக்கித் தானும் வாய் அசைத்துப் பொருளற்ற மழலைச் சொற்களை உதிர்க்கத் தொடங்குகின்றது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அகண்ட செவிகளும் நீண்ட நாக்குகளும் கொண்டனவாய்த் துலங்குகின்றன. எனவே தாலப் பருவம் என்பது பிள்ளைப் பருவங்களில் வரும் பத்துப் பருவங்களுள் ஒன்றாகும். ‘தாலோ தாலேலோ’, ‘ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ’ என்னும் சொற்கள் குழந்தையின் நெஞ்சில் கிளர்ச்சியை ஊட்டுவனவாகும். கவிமணி பாடிய குழந்தைத் தாலாட்டுப் பாடல்களில் சில பொறுக்கு மணிகளை இங்கே காண்போம்.

முல்லை நறுமலரோ?
முருகவிழ்க்குங் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
மருக்கொழுந்தோ சண்பகமோ?

★★★

நெஞ்சிற் கவலையெலாம்
நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
போற்றும் இளமதியோ?

★★★

8. It has been well said for a long time, a child's dearest toy is its to togue–Otto Jesperson Language its Origin and development

  1. சிறுபாணாற்றுப் படை ; 55-61