பக்கம்:சாமியாடிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சு. சமுத்திரம்

முடியும். பழனிச்சாமிக்கு சோடியாக முடியுமா. பேச்சியம்மாவுக்கு நான் எதிரியாகிற தகுதி... எனக்கு இருக்குதா... ஒரே ஒருத்தர் கிட்டதான் முறையிட முடியும்... ஆறுதல் சொல்ல அவரால் மட்டுமே முடியும். மலையாள மந்திரவாதி மகளைக் கற்பழித்து, அப்புறம் காவு வாங்கி இசக்கியாக்கினாரே, சுடலை மாடசாமி... அவர் தன்னையும் கற்பழிக்கட்டும்... காவாக்கட்டும்... ஆனால் கரும்பட்டையான் குடும்பத்த பழிவாங்க வேண்டும்... ஒருத்தியையாவது என்னைப் போல் ஆக்க வேண்டும். அவர் ஆக்கிக் காட்டவேண்டும்.

அலங்காரி சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்தாள். கண்களை மூடியபடி, வில்லுப் பாட்டாளி பாடிய பாடலை, மனதுக்குள் பாடினாள்.

"துக்கி வைக்கும் கால்களுக்கு... சுடலைக்கு
துத்திப்பூவு சல்லடமாம்,

எடுத்து வைக்கும் கால்களுக்கு...சுடலைக்கு
எருக்கலம்பூ சல்லடமாம்.

சல்லடமும் குல்லாயுமாய்...சுடலையே
சங்கடத்தை போக்க வாரும்..."

ஒப்பாரிபோல், பாடி முடித்த அலங்காரி சத்தம் போட்டே வரம் கேட்டாள்.

"சுடலைமாடா... சுடலைமாடா... திக்கில்லாத எனக்கு நீதான் தெய்வமடா... கரும்பட்டையான் குடும்பத்த நான் பழிவாங்கி ஆகணும்... உன்மூலம் நானோ, என் மூலம் நீயோ ஒருத்திய காவு வாங்கி. இசக்கியாக்கணும். அப்படி நீ ஆக்குனால்...சந்தையில விற்கதுக்காவ வளக்குற என் கிடாவை ஒனக்கு வெட்டுறேன். ஒரு பானை பொங்கல் படைக்கேன்... எள்ளு புண்ணாக்கு... ஏராளம் வைக்கேன்... நீயே கதி... நீயே அடைக்கலம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/56&oldid=1388286" இலிருந்து மீள்விக்கப்பட்டது