உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாயங்கால மேகங்கள்

99

"அப்படியா? நினைவு வரட்டும், ஏன் அவசரப் படுகிறீர்கள்?”

“நீங்க தமிழ்ப் புலவருங்க மாதிரியே பேசறீங்க சார்...”

“நல்லாத் தமிழ் பேசினா உடனே புலவர் மாதிரிங்கறாங்க! வேற எப்படித்தான் பேசறதாம்?"என்று கனகசுந்தரம் பதிலுக்கு அவளை மடக்கினார், பூமி அங்கிருந்தவர்கள் எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டான். தலையை ஆட்டு வதைத் தவிர அவர்களால் எதையும் விவாதிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.


15

அழுக்குப்படாமல் ஏதாவதொரு நாற் காலியில் உட்காருவது தான். அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் நினைத்து இளைஞர்கள் முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய நமது கல்வி முறை அவர்களைப் பலவீனப்படுத்தி, வைத்திருக்கிறது.


ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் அங்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் யாருக்கும் தீவிரமான முனைப்புடன் எதைப் பற்றியும் விவாதிக்கிற அக்கறையோ, அறிவோ இருக்க முடியுமென்று தோன்றவில்லை. ஏ. ஸி. அறையின் இதமான சுகத்தில் வம்பளந்து விட்டுக் கிடைத்ததைத் தின்று ஏப்பம்விட வந்த கூட்டமாக இருந்தது அது. தயாரிப்பாளருக்கும் பெரிய அக்கறை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.