கண்டிஷன் எதுவுமே சரியில்லேன்னு ரிப்போர்ட் எழுதி உங்க ஹோட்டலை இழுத்து மூடும்படி பண்ணிடுவோம்.”
காக்கி அணிந்த ஒரு தடித்த ஆள் சித்ராவிடம் மிரட்டிக் கொண்டிருந்தான்.
“முடிந்தால் நீங்கள் அதைச் செய்து கொள்ளலாம். உங்கள் பேரைக் கொஞ்சம் சொன்னால் விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரெப்ஷன்ஸ்லே ரிப்போர்ட் செய்ய எங்களுக்கும் வசதியாயிருக்கும்” என்று பூமி முன்னால் போய் நின்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுத் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தக் கார்ப்பொரேஷன் அலுவலர்கள்.
லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பாராலுமே பேணி வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது.
லஞ்சம், பிடுங்கித் தின்னுதல் இவற்றைப் பிரிட்டீஷ் ஆட்சி முறை தனது பிதுரார்ஜிதங்களாக இந்நாட்டுக்கு விட்டுச் சென்றதா அல்லது இந்தாட்டு அதிகார வர்க்கமே அந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. அரட்டி மிரட்டி எங்கெங்கே எதை லஞ்சமாக வாங்க முடியுமோ அங்கங்கே அதை லஞ்சமாக வாங்கி வயிறு வளர்க்கும்