பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
சாயங்கால மேகங்கள்
 

டாக்ஸியைச் செலுத்தச் சொல்லி அவர்கள் கூறியபோதுகூட முத்துக்காலைக்குத் தவறாகப் படவில்லை.

டாக்ஸி மக்கள் புழக்கமில்லாத ஒரு மேட்டருகே சென்றபோது அவர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள்.

மூவரில் ஒருவன் என்ஜினை ஆஃப் செய்து சாவியைப் பிடுங்கிக் கொண்டான். சற்ருெருவன் பின்பக்கமிருந்து கழுத்தில் உரசுகிறாற்போல ஒரு கத்தியைக் காட்டினான், மூன்றாமவன் “ஒழுங்காக உயிர் தப்ப வேண்டுமானால் பணத்தை எடு” என்று மிரட்டினான்.

முத்துக்காளை தயங்கவே மிரட்டியவன் தானே சோதனை போட்டு எடுக்க முற்பட்டான். இதை அறவே எதிர்பாராத முத்துக்காளை துணுக்குற்று இடிவிழுந்ததுபோல் இருந்தான். பணத்தை எடுத்துக் கொண்டு முன் பக்க டயர்கள் இரண்டிலும் காற்றைப் பிடுங்கிவிட்ட பின் அந்த இளைஞர்கள் ஓடி விட்டனர். முத்துக்காளை கூப்பாடு போடாமல் இருக்க வாயில் துணியைத் திணித்துப் பின் கைகளையும் கட்டிப் போட்டு விட்டுப் போயிருந்தார்கள் அவர்கள். மறு நாள் செய்தி பத்திரிகைகளில் பெரியதாக வெளியாயிற்று.

டாக்ஸி-ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை உண்டுபண்ணியிருந்தது. இரவு நேரங்களில் இரண்டு மூன்று பேர்களாக வந்து சவாரி கூப்பிடுகிறவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டு பிடிப்பது சிரமமாயிருந்தது. நம்பிச் சவாரி, போகவும் முடியவில்லை. சந்தேகப்பட்டே எல்லாச் சவாரிகளையும் விட முடியவும் இல்லை. இந்தப் புதுவிதமான தொல்லையைச் சமாளிப்பதற்காக டாக்ஸி-ஆட்டோ டிரைவர்களின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

பூமி தற்போது ஆட்டோ ஓட்டவில்லை என்றாலும் சாப்பிடுவதற்காக மெஸ்ஸுக்கு வந்த டிரைவர்கள் சிலர் பூமியை அந்தக் கூட்டத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்றுப் பூமியும் அங்கே