128
சாயங்கால மேகங்கள்
விரோதிகள் எல்லாக் கெடுதல்களையும் உடனே துணிந்து செய்கிறபோது அதை எதிர்க்கவும் தடுக்கவும் வேண்டிய நல்லவர்கள் எடுத்ததற்கெல்லாம் ஒவ்வொரு விநாடியும் கூச்சமும் பயமுமாகத் தயங்கிக்கொண்டு நின்றால் எப்படி? தீமை செய்கிறவன் நாணுவதற்குப் பதில் நன்மை செய்கிறவனே நாணியும் கூசியும் பயந்து நின்றால் அப்படிப் பயந்து சாகிற சமூகம் உருப்படாது. அதனால்தான் மகாகவி பாரதி யார் புதிய தலைமுறை மனிதனுக்குச் சொல்லும்போது ‘நாணமும் அச்சமும் மடநாய்களுக்கு அன்றே வேண்டும்?’ என்று மிகவும் கடுமையாகச் சாடினார்,
தீயவற்றை எதிர்க்கக் கூசும் கூச்சமும், தயக்கமும் இந்திய சமூகத்தைப் பிடித்த புதிய தொத்து நோய்கள். நல்ல வற்றை ஆதரிக்கவும் தயங்கித் தீயவற்றை எதிர்க்கவும் தயங்கி எதற்கும் துணிய முடியாமல் நிற்கும் இரண்டும் கெட்டான் மனிதர்கள்தான் இன்று மிகப் பெரிய சமூக விரோதிகள். தீமையைத் துணிந்து செய்கிறவனைவிட, அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் மோசமானவன். இப்போது கேள்வி எல்லாம் நாம் இந்தப் பிரச்னையைத் துணிந்து எதிர்த்து வெற்றி கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதுதான்! இதற்கு எனக்குப் பதில் தெரிந்தாக வேண்டும்.
சித்ராவும் தேவகியும் பிரச்னைக்கு இலக்கான அந்தப் பெண்ணின் தாயிடம் எவ்வாறு இதைப்பற்றிக் கூறுவது என்று தயங்கினார்கள். அவர்களுக்குள் இப்படி வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது நல்லவேளையாக லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அங்கே தற்செயலாக வந்து சேர்ந்திருந்தார். அவரிடம் விவாதத்தைக் கூறி யோசனை கேட்டார்கள் சித்ராவும் தேவகியும். பூமி கூறியபடி பிரச்னையை மிகவும் சாதுரியமாகச் சமாளிக்க வேண்டும் என்பதை அவரும் ஒப்புக் கொண்டார். பெண்ணிடத்திலும் அவள் தாயிடத்திலும் தானே வந்து விஷயத்தை எடுத்து விளக்கிச் சொல்வதாகப் பரமசிவம்