சாயங்கால மேகங்கள்
135
யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக்கிட்டிருந்தாரு. ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்திச்சு. அப்ப யாரோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிட் டாங்க” என்று வாட்ச்மேன் பட்டுக் கொள்ளாமல் போலீஸாரிடம் சொன்னான்.
அன்று அங்கே பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் என்று தெரிவதற்கு சிறிது நேரம் ஆயிற்று. உடனே பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார்கள். அவர் ஊரில் இல்லை என்றாலும் வீட்டிலிருந்து கார் அனுப்பப்பட்டது. அதற்குள் குமரகுருவின் உடல்மேல் பரப்பப் பட்டிருந்த சுவரொட்டியுடன் சில பத்திரிகை நிருபர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
பொது இடத்தில் அடிப்பட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினரின் மகன் என்று தெரிந்த பின்பும் கூடியிருந்த பொது மக்களின் கோபமும் ஆத்திரமும் மாறவில்லை. பார்க் வாட்ச்மேன் கூறியதிலிருந்தும் அங்கே மூர்ச்சையாகிக் கிடந்தவன் மேல் விரிக்கப்பட்டிருந்த போஸ்டரிலிருந்தும் நடந்ததைப் புரிந்துகொண்டிருந்த பொது மக்கள் தங்களுக்குள் ஆத்திரமாகவும் கோபமாகவும் பேசிக்கொண்டார்கள்.
“பெண்களைத் துரத்துகிற காமவெறியன் ஒவ்வொருவனுக்கும் இப்படி உறைக்கிற விதத்தில் ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும். அப்பொழுதுதான் விடலைகளுக்குப் புத்தி வரும்” என்றார் ஒருவர்.
“நக்ஸலைட்டுகள்தான் இப்படி எல்லாம் தாக்கிவிட்டுப் பக்கத்தில் எழுதியும் போடுவார்கள்.”
“இதை அவர்கள் செய்திருந்தால் இதற்காக அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும். சமூகத்தின் அந்தஸ்தில் எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுள்ள அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத்