உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சாயங்கால மேகங்கள்

நடந்தால் யுத்த காண்டமே அதில் இருக்காது! இராவணன் போரிடாமலே ஜெயித்து விட்டிருப்பான்...”

“முரடர்கள் இராவணர்களோ இல்லையோ, சாவித்திரியின் காதலன் நிச்சயமாக இராமன் இல்லை.”

“பெண்ணரின் உடம்பை மட்டும் காதலிப்பவர்கள்தான் இன்று அதிகம்...”

“அதை இன்றைய கதைகளும் சினிமாவும் அப்படி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. என்ன செய்யலாம்.

இந்த உரையாடலால் சித்ரா மிகவும் பெருமிதப்பட முடிந்தது.


26

அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கை தட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது!


டற்கரைச் சம்பவத்தன்று இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புரண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்தியம் அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.

பத்திரிகை நடத்திப் புதுக்கவிதை எழுதும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளையான் புரட்சிமித்திரன், முதலிய தான்