உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

சாயங்கால மேகங்கள்

சித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள்.


27

வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழ்ந்துவிட முடியாது; கூடாது.


ன்று முத்தக்காளின் கோபத்துக்கு ஆளானதில் சித்ராவின் மனம் பெரிதும் புண்பட்டு விட்டது. பூமியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் அவள் மீண்டும் கேஷ் டேபிளில் அமர்ந்தாளே ஒழிய உண்மையில் அங்கே இருப்பது முள்ளின் மேல் உட்காருவது போல் இருந்தது அவளுக்கு.

பழி சுமத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி மனம் நைந்து போயிருந்தாள் அவள். இத்தனை நாள் பழகியும் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் யாரோ ஒரு கைச்சுத்தமில்லாத சர்வர் கூறிய கோள் வார்த்தைகளை நம்பி முத்தக்காள் ஒரே நொடியில் பொரிந்து தள்ளி விட்டாளே என்று மனம். குமுறியது.

“இது நான். பள்ளியில் மாதம் பூராவும் உழைத்து வாங்கிய சம்பளப் பணம். என் மேல் நம்பிக்கை இல்லாமல் அப்படி உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் இதையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பணம் பெரிதில்லை. மானம்தான் பெரிது என்று உடனே முத்தக்காள் முன்னால் போய் ஆத்திரம் தீரக் கூறி அந்தப் பணத்தை வீசி எறிந்துவிட வேண்டும் போல் சித்ராவுக்குக் கை துறுதுறுத்தது. மத்திய தரக் குடும்பத்து மனப்பான்மையோடு கூடிய படிப்பறிவு இல்லாத ஒரு விதவை எப்படி நடந்துகொள்வாள் என்று எதிர்பார்க்க முடியுமோ அப்படித்தான் முத்தக்காள் நடந்து கொண்டிருந்தாள்.