166
சாயங்கால மேகங்கள்
அப்படி வத்தி வச்சு கோள் மூட்டியிருக்காட்டி இது நடந்தே இருக்காது’ என்று குனிந்த தலை நிமிராமல் சித்ராவிடம் மன்னிப்புக் கேட்டாள் முத்தக்காள்.
டேபிளில் குத்தியிருக்கிற பில்களோட மொத்தத் தொகையும் உள்ளே இருக்கிற ரொக்கமும் சரியாயிருக்கு! கணக்கு விவரம் எழுதி வச்சிருக்கேன். பார்த்துக் கொள்ளலாம்!” என்று பூமி, முத்தக்காள் இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டுக் கேஷ் டேபிளிலிருந்து ஒதுங்கிக் கீழே இறங்கினாள் சித்ரா.
“கொஞ்ச நேரம் நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் அதற்குள் நான் இவளை வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி முத்தக்காளை கேஷ் டேபிளில் அமரச் செய்துவிட்டுச் சித்ராவோடு வெளியே புறப்பட்டான் பூமி.
மெஸ்ஸிலிருந்து வெளியேறித் தெருவைக் கடந்து எதிர் வரிசைப் பிளாட்பாரத்துக்கு வந்தவுடனே பூமி சித்ராவிடம் பேசினான்:
“ஒன்றும் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்! விவரம் புரியாமல் அவசரப்பட்டுவிட்டாள். நான் எடுத்துச் சொல்லி விளக்கியதும் வருத்தப்படுகிறாள்.”
“உங்களுக்காகத்தான் நான் இங்கே இத்தனை உரிமை. எடுத்துக்கொண்டு ஊடாடி வேலை செய்தேன். ஒரு தப்பும். செய்யாமலே இத்தனை பெரிய அபவாதத்துக்கு ஆளாக நேரும் என்று தெரிந்திருந்தால் இந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடப் பயந்திருப்பேன்.”
“அறியாமையின் அடையாளங்களில் முதன்மையானது சந்தேகம். அதை மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர வேறு வழி இல்லை.”
“நாணயத்தைச் சந்தேகப்படுகிற இடங்களில் பழகுவதற்கே பயமாயிருக்கிறது...”
“பயப்படவோ ஒதுங்கி விடவோ கூடாது! எனக்காக எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்."