உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

சாயங்கால மேகங்கள்

"உங்களிடம் அந்த அநாவசியமான தியாக உணர்வு இல்லை என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியுமா?

“தியாகத்துக்குப் பாத்திரமாக முடியாத பச்சை வியாபார நிறுவனங்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராயில்லை” என்றார்கள் அவர்கள்.

அப்படியானால் உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன் என்று தொடங்கி அவர்களுக்கு யோசனைகள் கூற முன்வந்தான் பூமி.


28

விவரந் தெரிந்த கோழைகளுக்கும் விவரம் தெரியாத முரடர்களுக்கும் நடுவே சிக்கி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன.


சித்ராவின் தோழிகளான அந்த ஆசிரியைகளின் பிரச்னைகளைப் பற்றி முதலில் லெண்டிங் லைப்ரரி பரமசிவமும் பூமியும் கலந்து ஆலோசித்தார்கள். பின்பு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற கல்வித்துறைப் பிரமுகர் ஒருவரைத் தேடிப் போய்ச் சந்தித்தார்கள். எல்லாரும் ஒரே குறையைத்தான் சொன்னார்கள்.

“புடித்த வர்க்கத்தை ஒன்று சேர்ப்பது ரொம்பச் சிரமம். நெல்லிக்காய் மூட்டையைப் போலத்தான். சாக்கைக் கொஞ்சம் பிரித்துத் தளர்த்தினால் போதும. மூலைக்கொருவராகச் சிதறி ஓடிவிடுவார்கள். துணிந்து தாங்களே முன் வந்து தீமையை எதிர்ப்பதற்குப் பயப்படுவார்கள். யாரோ ஒரு தைரியசாலி வெகுஜன விரோதியாகி அத்தனை விரோதத்தை