பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
174
சாயங்கால மேகங்கள்
 

களுக்கும் நடுவில் சிக்கி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன. விவரந்தெரிந்தவர்கள் அளவற்றுப் பயந்து தயங்கிக் கூசினார்கள். விவரந் தெரியாதவர்கள் அளவற்றுத் துணிந்து முந்திக் கொண்டு எல்லாவற்றை யும் செய்ய முற்பட்டிருந்தார்கள்.

அன்று மாலை சித்ராவும், பூமியும் தீவுத்திடலில் அந்தப் பொருள் காட்சிக்கு போன போது வானம் மப்பும் மந்தாரமுமாக மூட்டம் போட்டிருந்தது. சூழ்நிலை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாகவும் இதமாகவும் இருந்தது.

சித்ராவின் தோழிகளான ஆசிரியைகள் மாணவர்களோடு பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். தேவகியையும் சித்ராவையும் தவிர மற்ற ஆசிரியைகள் பூமியைக் கண்டதுமே ஏதோ பேய் பிசாசைப் பார்த்துவிட்டதைப் போலப் பயந்து செத்தார்கள்.

அவர்களுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பலரைச் சந்தித்து அரும்பாடுபட்டுக் கைப் பணத்தைச் செலவழித்து தானும் சித்ராவுமாக அந்தப் பெட்டிஷனைத் தயாரித்ததை விவரித்தான் பூமி. அவர்கள் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே தயாராயில்லை. அந்தப் பேச்சைத் தவிர்த்தார்கள்.

பூமி விடாமல் வற்புறுத்தவே ‘எங்க கரஸ்பாண்டெண்டுக்கு எல்லா சர்க்கார் ஆபீஸ்லியும் நிறைய வேண்டியவங்க உள்கையா இருக்காங்க, பெட்டிஷன் அங்கே போனதுனு யார் யார் அதிலே கையெழுத்துப் போட்டிருக்கோம்ன்னு அவருக்கு உடனே தெரிஞ்சு போயிடும்’ என்று ஒரு மூத்த ஆசிரியை பயத்துக்குக் காரணத்தை விளக்கினாள்.

அரை மணி நேரத்துக்கு மேல் பூமி மன்றாடியும் பயன் விளையவில்லை.

ஏமாற்றத்தோடு சித்ராவும், பூமியும் திரும்பிய போது அங்கே பொருட்காட்சி இயங்கிக் கொண்டிருந்த ராட்-