உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சயங்கால மேகங்கள்

175

-டினம் (ஜியண்ட் வீல்) ஒன்றைச் சுட்டிக் காட்டி, ‘எனக்கு அதிலே ஏறிச் சுத்திப் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு’ என்றாள் சித்ரா.

பூமிக்கு அப்போது அதில் ஈடுபாடு இல்லை என்றாலும் சித்ராவுக்காக உடன் வர இசைந்தான். ஜியண்ட் வீலில் ஆசனங்கள் இரண்டிரண்டு பேருக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக இருந்தன. கட்டணம் கட்டி டிக்கட் வாங்கிய பின்னர் பூமியும் சித்ராவும் ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்தனர்.

ராட்டினம் முதலில் மெதுவாக இயங்க ஆரம்பித்துப் பின் வேகமாகச் சுற்றத் தொடங்கியது. வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சித்ரா பயப்பட ஆரம்பித்தாள். அவள் முகத்தில் வேர்த்தது, பயமும் பதற்றமும் தெரிந்தன.

“பழக்கமில்லாதவர்களுக்கு அதிக வேகம் ஒத்துக் கொள்ளாது” என்றான் பூமி”.

“யாரைச் சொல்கிறீர்கள்?”

“தனியாக யாரையும் சொல்லவில்லை, எல்லா ஆசிரியைகளுக்குமே இது பொருந்தும்.”

“இல்லை பொருந்தாது! நானும் தேவகியும் மகஜரில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம்” என்று அவனை நோக்கிப் புன்னகையோடு பதில் கூறினாள் சித்ரா.


29

எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடைந்தெடுத்த கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத் தனமே தொடரும்.