சாயங்கால மேகங்கள்
177
"நீங்கள் ரொம்பவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.”
“நம்பியவர்கள். ஏமாற்றிவிட்டால் என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது! நான் என்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றியதில்லை...”
“இதில் உங்களுக்கு என்ன வந்தது? எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே?”
‘"அப்படியில்லை! மண் குதிரைகளை நம்பி நான் ஆற்றில் இறங்காமலாவது இருந்திருக்கலாமே”
“உண்மைதான்! ஆனால் இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. நானும் தேவகியும் கையெழுத்துப் போட்டிருக்கிறோமே. அந்த இரண்டு கையெழுத்துக்களுடனே நீங்கள் பெட்டிஷனை அனுப்பலாம்.”
“இந்த ஆட்டு மந்தைக் கூட்டம். நன்மையடைவதற்காக நீங்கள் இருவரும் பலியாகத்தான் வேண்டுமா?”
“பலருக்குக் கிடைக்கிற பெரும்பாலான நன்மைகள் சிலர் பலியாவதனால்தான் கிடைக்க முடிகிறது.”
நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் இருவருடைய கையெழுத்தோடு மட்டும் அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் தீவுத் திடலிலிருந்து லஸ் முனைக்குச் செல்வதற்காக பஸ் ஏறியபோது பஸ்ஸில் பொருட்காட்சிக்கு வந்து திரும்பும் கூட்டம் பயங்கரமாயிருந்தது. ஒரே நெரிசலும் நெருக்கடியுமாகப் பஸ் பிதுங்கி வழிந்தது.
கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தும் பயனில்லை. அலை ஓய்ந்து நீராட முடியாது. ஒவ்வொரு பஸ்ஸும் முந்தியதைவிட அதிகக் கூட்டத்தோடுதான். சிரமப்படப் போகிறது. வந்த முதல், பஸ்ஸிலேயே அவர்களும் முண்டி-