பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுசாயங்கால மேகங்கள்
193
 

கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் அப்பாவி மாணவர்களைத் திருடுவது. சாராயம் கடத்துவது ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்திவிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் தயாரித்திருந்தான் இந்த ஆள். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் இவன்தான் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வட்டாரத்தில் இருந்த கள்ளச் சாராய இருட்daறைகள், விபசார விடுதிகள், சூதாட்ட கிளப்கள் எல்லாமே இந்த பிரமுகன் முதலீட்டில்தான் நடந்து கொண்டிருந்தன.

இந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்க வேண்டுமென்று பூமி விரும்பினான். சித்ராவிடம் அவன் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தபோது அவள் தயங்கி அஞ்சினாள்.

“இப்படிக் கூட்டங்களை எதிர்த்துக் கொண்டு கிளம்பினோமானால் அது எங்கெங்கோ போய் முடியும்.”

“மூலைக்கு மூலை வலுவான அடியாட்களை நிரப்பி வைத்துதிருக்கிறார்கள் இவர்கள், பாம்புப் புற்றில் கையை விடுவது போல் இதில் தலையிடத்தான் வேண்டுமா? என்பதை ஒரு முறைக்கு இரு முறையாக யோசித்துக் கொள்ளுங்கள்.”

“இங்கு இவனைப் போன்ற சமூக விரோதிகளை யாராவது மட்டம் தட்டி அழித்துத்தான் ஆக வேண்டும். இல்லையானால் ஊரையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடுவார்கள். இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் நல்லவர்களை விரோதித்துக்கொள்ள எல்லோருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக்கொள்ள யாருமே தயாராய் இல்லை. இதனால் தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.”

இந்தப் பெரிய நகரத்தில் தீமையை அழித்தொழிப்பதற்கும் நன்மையைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு என்று ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்?'”

ஒவ்வொருவரும் அப்படி நினைக்காமலே விலகிச் சென்றால் அப்புறம் யார்தான் அதற்குப் பொறுப்பு? யாராவது