உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

சாயங்கால மேகங்கள்

பொருட்படுத்தவில்லை. பச்சை நிற விளக்குகள், மஞ்சள் விளக்குகள், சிவப்பு நிற விளக்குகள் ஏராளமான இண்டர்காம்கள், காலிங்பெல்கள் என்று ஒரு பெரிய கண்ட்ரோல் ரூம் போல் இயங்கியது அந்த வரவேற்பு அறை.

விளக்குகள் நிறம் நிறமாக எரிவதும் அணைவதுமாக இருந்தன. டெலிபோன் மணி உட்பட மணிகள் ஒலிப்பதும் ஓய்வதுமாக இருந்தன. நவீன உத்திகளுடனும் நவீன வசதிகளுடனும் அழகு சாதன நிலையம் என்ற அங்கீகரிக்கப் பட்ட போர்வையில் சதை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது அதிகம் யோசிக்க அவசியமில்லாமலே புரிந்தது.

பங்களாவின் உட்பகுதியில் பூமியை நெடுந்தூரம் சுற்றி வளைத்து அழைத்துச் சென்றார்கள் அவர்கள். அந்த வீட்டுக்குள் அத்தனை சந்து பொந்துகளும் இடுக்குகளும் இருக்க முடியும் என்று வெளியே இருந்து பார்க்கும் போது கற்பனை கூடச் செய்ய முடியாது. கதவுகளும் வாசல்களும் எங்கெங்கோ எப்படி எப்படியோ அமைந்து இருந்தன. உள்ளே நன்றாகப் பழகியவன் வழிகாட்டி, அழைத்துச் சென்றாலொழியப் போவதும் திரும்புவதும் கடினமாயிருக்கும் போல தெரிந்தது.

கடைசியாக ஏ.சி. செய்த ஓர் அறையில் அலங்கோலமான நிலையில் பல பெண்கள் புடைசூழ நல்ல குடிவெறியில் தன் நிலை தடுமாறிப் போயிருந்த மன்னாருவின் முன்னால் கொண்டு போய் விட்டார்கள். லிக்கர் நெடியும், சிகரெட் புகை நெடியுமாrக அந்த அறையை நகரமாக்கி இருந்தன.

அங்கே மன்னாருவை நேரில் பார்த்தபோது அவன் தான் கற்பனை செய்திருந்த மாதிரி இல்லை என்பதைப் பூமி புரிந்து கொண்டான். வெடவெடவென்று ஒடிந்து விழுகிற மாதிரி இருந்த அவன் முகத்தில் மீசைமட்டும் பெரிதாயிருந்தது. அம்மை வடுக்கள்... மொய்த்த முகத்தில் தெறித்து விழுந்து விடும் போல விழிகள் பிதுங்கி நின்றன.

ஆடை நழுவிப் போனது தெரியாமல் வெறும் உள்ளாடையான அரை டிராயரோடு இருந்த அவன் திடீரென்று “யார்ரா