உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சாயங்கால மேகங்கள்

ஒருவன் பூமியால் மன்னிக்கப்பட்டு வேலை பார்த்தானே, அவன் பூமிமைத் தனியே சந்தித்துத் தன் பயத்தைத் தெரிவித்தான்.

“இப்போ என் மேலேதான் சார் அவங்க சந்தேகப் படறாங்க! நான் இங்கே வேலை பார்க்கிறதும் நீங்க இங்கே இருக்கிறதும் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இரண்டு மூணு நாளா நான் எங்கே போனாலும் நிழல் மாதிரி என்னைப் பின் தொடர்ராங்க...”

“நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன்.

“எப்படி சார் பயப்படாம இருக்க முடியும்? இந்த ஆளுங்க கொலை பாதகத்துக்கு அஞ்சாதவங்க... என்ன வேணப் பண்ணுவாங்க.”

“நான் இருக்கிறவரை உன்னை யாரும் தொடக்கூட முடியாது. கவலைப்படாதே.”

பூமியின் இந்த உறுதிமொழிகள் கூடப் அந்தப் பையனைத் திருப்திப்படுத்தவில்லை. அவன் நடுங்கினான்.

“உண்மையில் நான் உங்களுக்கு எதையும் சொல்லலே. நீங்களாகவே இந்தக் கும்பலைக் கண்டு பிடிச்சுட்டீங்க...ஆனா நான் சொல்லிக் குடுத்துத்தான் நீங்க அவங்களைத் துரத் தறீங்கன்னு அவங்க நினைக்கிறாப்ல இருக்கு.”

“நீயாக அப்படி ஏன் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டும் தம்பி?”

“கற்பனை எதுவும் இல்லை சார்! இந்தப் பாவிகளைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரியாது. போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க” என்று அந்தப் பையன் பதறி நடுங்கிச் சொல்லிய போது கூடப் பூமி அவ்வளவு பரபரப்படையவில்லை.

ஆனால் மறு நாள் நடந்த ஒரு நிகழ்ச்சி அவனைப் பரபரப்படையச் செய்தது. கல்லூரி நேரம் போக மீதி வேளைகளில்