208
சாயங்கால மேகங்கள்
என்பதை எதிர் பார்த்து மன்னாருவே ஒரு கும்பல் அடியாட்களை அங்கே நிறுத்தி வைத்திருப்பதைப் பூமி விரைந்துஉணர்ந் தான்.
ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டுவிட்டு “நீ ஸ்கூட்டர் பக்கத்திலே இங்கேயே நின்று கொள்!” என்று சித்ராவின் காதருகில் கூறிவிட்டு அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான் பூமி.
அவர்களுக்குத் தான் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிய வைக்கலாம் என்ற உற்சாகத்தில் திளைத்திருந்தது அவன் மனம்.
“மாட்டிக்கிட்டியா வாத்தியாரே?” என்று பல்லிளித்தபடி இரும்புக் குழாயை ஓங்கி வந்தவனிடமிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அதைப் பற்றிக் கொண்ட பூமி -
“யார் யாரிடம் மாட்டிக் கொண்டார்கள் என்பதைச் சீக்கிரமே புரியவைக்கிறேன் அப்பா!” என்று அட்டகாசமாகச் சிரித்தபடி அவர்களுக்கு மறுமொழி கூறினான்.
அபாயங்களிலிருந்து பத்திரமாக விலகி ஒதுங்கி செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர்கொண்டு அவற்றை ஒதுக்கி விலக்கிவிட்டுச் செல்லத் துணியும் ஆண்மை மிகவும் பெரியது.
சிறிது நேரத்திலேயே தான் யார் என்பதை அந்த முரட்டுக் கும்பலுக்கு நிரூபித்துக் காட்டினான் பூமி. யாரோ