20
சாயங்கால மேகங்கள்
மூச்சுப் பிரிந்து விட்டது. நேற்று இங்கே தான் எரித்தோம்...” என்று அருகே நின்ற கன்னையனைச் சுட்டிக் காட்டினான் பூமிநாதன். அவள் அவனைக் கேட்டாள்.
“எங்கே குடியிருக்கிறீர்கள்?”
“மைலாப்பூர், நீங்கள்..?”
“இங்கேதான் பாலாஜி நகர்.”
அவர்கள் இருவரும் மறுபடி சந்தித்தபோது அவன் தாயை இழந்திருந்தான். அவள் தந்தையை இழந்திருந்தாள்.
தமிழ்நாட்டு இளைய தலைமுறைக்குத் திரு. வி. க. வைத் தெரியவில்லை. சிவாஜி கணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை. ஜெயமாலினியைத் தெரிகிறது... உருப்படுமா இது?
தனி மனிதனின் சிறிய துயரங்கள் எந்த நகரத்தின் பெரிய வாழ்க்கை வேகத்தையும் எள்ளளவு கூடத் தடுத்து நிறுத்துவதில்லை. ஒரு நகரத்தின் அடையாளம் புரியாத பொது உல்லாசங்களை அடையாளம் புரிந்த தனி மனிதர்களின் துயரங்கள் ஒரு விநாடிகூடத் தடுத்து நிறுத்த முடியாது, .. இயலாது, செளகரியப்படாது.
மாபெரும் சென்னை என்கிற ஜன ஆரண்யத்திற்குள் பூமி தாயை இழந்ததும், சித்ரா தந்தையை இழந்ததும் நடந்து மறந்த நிகழ்ச்சிகளாக’ : மறைந்து மங்கிவிட்டன.