240
சாயங்கால மேகங்கள்
டில்லிக்கு அவன் அப்படிச் செய்ததில் வருத்தம்தான். தான் பூமியின் மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்து அது பலிக்காமல் போய்த் தோற்று நின்ற வெட்கத்தில் கூ.சிக் குறுகிப் போயிருந்தான் டில்லி. கார் டில்லி.
மன்னாரு எப்படி இவ்வளவு அக்கிரமங்களைச் செய்து கொண்டே இப்படிச் சர்வ வல்லமையோடு தப்பி வாழ முடிகிறதென்ற அதிசயத்தை அவன் டில்லியிடம் வினவிப் பார்த்த போது டில்லிக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை. காரணம் எது நியாயம், எது அக்கிரமம் என்றே அப்போது புரியாதவனாக இருந்தான் டில்லி.
பணம் சேர்ப்பதற்காக வசதியாக வாழ்வதற்காக செளக்கியமாயிருப்பதற்காக எதையும் செய்யலாம் என்பது மட்டுமே டில்லிக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் நியாய அநியாயங்களைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. புதிதாகத் தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை, சுருக்க மாக ஒரு விஷயத்தை அவன் பூமியிடம் சொன்னாள்.
“முன்னாடி ஆட்சியிலே இருந்தவங்களுக்கும் அவரு தோஸ்த். இப்ப ஆள்றவங்களுக்கும் தோஸ்த். மன்னாரு இல்லாட்டி இங்கு ஆட்சிங்களே இருக்காது. யார் ஆண்டாலும், அவங்கெல்லாம் மன்னாருவோட ‘பினாமி'யாத்தான் பேருக்கு ஆள்றாங்க.....”
“சட்டம், போலீஸ் இதெல்லாம் கூடவா?”
“அதெல்லாத்தையுங் காட்டிப் பணம், அடியாள் சாராயம்லாம்தான் முக்கியம். இன்னிக்கு ஒருத்தன் நாற்காலியிலே குந்திக்கினு கீருன்னா அதுக்கு மன்னாருதான் ஆணி வேரு மாதிரி! ஆணி வேரு பட்டுப்பூட்டா அல்லாமே பூடும்.”
இந்திய ஜனநாயகத்துக்கே புதிய விளக்கம் கொடுத்தான் டில்லி. அரசியல் சட்ட வித்தகர்களின் விளக்கங்கள் வியாக்கியானங்களை விட, டில்லி கொடுத்த விளக்கம்தான் நடைமுறை உண்மையாயிருக்குமோ என்று பூமிக்கே பிரமையாயிருந்தது. டில்லி கொடுக்கிற விளக்கப்படி பார்த்தால் அப்போது தான் ஓர்