பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248
சாயங்கால மேகங்கள்
 

கட்டுமரத்தில் . கடலுக்குள் போவதற்கும் துணிந்திருந் தார்கள்.

பூமியும் மற்ற இருவரும் எண்ணூர் போய்ச் சேரும்போது இரவு மணி ஒன்பதரைக்கு மேலிருக்கும். ஒரு டீக்கடை அருகே ஆட்டோவை நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுக் கடலுக்குள் போகப் படகு. அல்லது கட்டுமரம் தேடிய போது, அந்த நள்ளிருளில் இவர்கள் ஏன் கடலுக்குள் போக ஆசைப்படுகிறார்கள் என்பது அங்கிருப்பவர்களுக்கு புரியவில்லை.

அவர்களிடமிருந்து ஏராளமான குறுக்குக் கேள்விகள் பிறந்தன. கடைசியில் கட்டுமரத்து ஆட்கள் இருவர் இவர்களை யாரோ கடத்தல்காரர்கள் என்று எண்ணிக் கொண்டு பண ஆசையுடன் வரச் சம்மதித்தனர். பூமிக்கு அவர்களது அந்த அநுமானம் அருவருப்பூட்டியது. ஆனால் அதை முதலிலேயே மறுத்தால் அவர்கள் கடலுக்கு வர மறுப்பார்களென்றும் தோன்றியது.


42

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள , கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர் வழிகள் எல்லோருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கமே நடத்தி வருகிறார்கள்.


டில்லிபாபு கொடுத்திருந்த இரகசியத் தகவலின்படி மன்னாருவின் ஆள்கடத்தல் கும்பலைத் தேடித் தாங்கள் செல்வதைக் கட்டு மரத்து ஆட்களிடம் பூமி தெரிவிக்கவில்லை. காசிச்செட்டி சந்து ஆட்களுக்கு கடத்தல் பொருள்களை