சாயங்கால மேகங்கள்
251
அங்கே முதலில் தென்பட்ட கீற்றுக் குடிசையினருகே ஒரு மீனவப் பெண் கூடையோடு நின்று கொண்டிருந்தாள். அந்த அகாலத்தில் அவள் யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல் தான் தோன்றியது. பூமியையும் நண்பர்களையும் பார்த்ததும் அவள் தெலுங்கில் ஏதோ கேட்டாள். இவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. தயங்கினார்கள். அவள் இவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒரு விநாடி கூடத் தயங்காமல் உடனே குடிசைக்குள் ஓடிவிட்டாள்.
பூமி துணிந்து அவளைப் பின் தொடர்ந்து குடிசைக்குள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். உள்ளே ஏராளமான அட்டைப் பெட்டிகள் கட்டி முடிந்து வைக்கப்பட்ட பாலிதின் பைகள் என்று குவிந்திருந்தன. அவ்வளவும் கடத்தல் சாமான்களாக இருக்க வேண்டும். தடிமன் தடிமனாக நாலைந்து ஆட்களும் இருந்தார்கள். பதுங்கிக் கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாக உள்ளே எட்டிப் பார்த்த வேகத்தில் பூமி. தலையை வெளியே இழுத்துக் கொண்டு விட்டான்.
“ஒரு தாக்குதலைச் சமாளிக்கத் தயாராயிருக்குமாறு நண்பர்களுக்கு ஜாடை காட்டினான். ஆனால் அவன் நினைத்தபடி நினைக்கவில்லை. குடிசைக்குள்ளிருந்து யாரும் இவர்கள் மேல் பாயவில்லை. கடத்தல் சரக்கை வாங்க வந்த மொத்த வியாபாரி என்று தங்களை அவர்கள் முதலில் நினைத்திருக்க வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது.
அந்த மீனவப் பெண் கூறிய தெலுங்கு வார்த்தைக்கு ஏதோ ஒரு பொருத்தமான பதில் வார்த்தை இருக்க வேண்டும். என்றும் அது தங்களுக்குத் தெரியாமல் தாங்கள் விழித்துக் கொண்டு நின்றதனால்தான் தாங்கள் சரக்கு எடுக்க வந்த ஆட்கள் இல்லை என்று அவர்கள் சுலபமாகவே முடிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அநுமானிக்க முடிந்தது. தாங்களாகவே உள்ளே புகுந்து சண்டைக்கு இழுக்காத பட்சத்தில் அவர்கள் சண்டைக்கு வரத் தயாராயில்லை என்று தெரிந்தது. அவர்கள் வெளியே எதிர்பார்த்துச் சிறிது நேரம்