பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
254
சாயங்கால மேகங்கள்
 

"எங்கே புதைச்சாங்க? ஏன் எரிக்கலே..?”

“அதென்னமோ தெரியலீங்க...?” ஒரு வேளை சட்டைக் காரப்பையனோ என்னமோ?”

“எங்கேன்னு காட்ட முடியுமா பெரியவரே?”

“வம்பு பிடிச்ச வேலை... போனவன் பிழைச்சு வரப் போறதில்லை... வேண்டாம் வுட்டுடுங்க... ஆபத்தாயிடும்” என்று பதறி மெல்ல நழுவினார் பெரியவர்.


43

தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவர்களும் நல்லது செய்ய முயல்பவர்களும் கூடக் கெட்டவர்கள்தான்.


வ்வளவு கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகும் தமது உரிமையை நிலை நாட்ட அங்கே துணிந்து குடியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட அவரே இப்போது பயப்படுகிறார் என்பது பூரிக்குப் புரிந்தது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டு மிகவும் தணிந்த பதற்றமான குரலில் அவரே சொன்னார்:...

“நீங்கள் இந்தத் தீவிலே நுழைஞ்சது-இங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்தது -இப்ப இங்கே உட்கார்ந்து பேசிச்கிட்டிருக்கிறது இதெல்லாத்தையும் யாரும், கவனிக்கலேயாருக்குமே தெரியாதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருப்போம். ஆனா அது சரியில்லே... ... இது அத்தனையையும் எங்கேயிருந்தாவது யாராவது கவனிச்சிக்கிட்ருப்பாங்க... நீங்க தனிப்பட்ட முறையிலே என்னைத் தேடி வந்தவங்களா இல்லி-