26
சாயங்கால மேகங்கள்
கொடுத்துவிட்டுப் பரமசிவத்தின்தின் ‘திரு. வி. க. லெண்டிங் லைப்ரரி’க்கும் போய்விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினான் பூமி.
லெண்டிங் லைப்ரரி இராயப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததால் அதே வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் திரு.வி.க. வின் பெயரை அதற்குச்சூட்டியிருந்தான் பரமசிவம். இந்தத் தலைமுறைத் தமிழ் வாசகர்களில் சிலர் “திரு.வி.க. என்பது யாருடைய பெயர்?” என்று விசாரிக்கிற அளவு அறியாமை நிறைந்தவர்களாக இருப்பது பற்றியும் பரமசிவமே பூமியிடம் மனம் நொந்து வருந்தியிருந்தான்.
“பூமி! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை; சிவாஜி கணேசனத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை; ஜெயமாலினியைத் தெரிகிறது. உருப்படுமா இது?”
கலாசாரச் சீரழிவு என்ற தொத்து நோயில் தமிழகம் திளைத்திருக்கிறது என்னும் பரமசிவத்தின் கருத்து பூமிக்கும் உடன்பாடுதான். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அதைப் பூமி ஒப்புக் கொண்டான். .
அன்று மாலை அவன் ஸ்டூடியோவுக்குப் போய்த் தாயின் ‘நெகடிவ்’வைக் காபினட் சைஸ் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டு திரு.வி.க. லெண்டிங் லைப்ரரிக்கு வந்தான்.
அப்போது பரமசிவம் அங்கே இல்லை. பரமசிவத்தின் தம்பி முருகேசன் இருந்தான். விசாரித்தபோது பரமசிவம் ஹோட்டல் ‘ஸ்வாகத்’ வரை காபி குடிக்கப் போயிருப்பதாவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவான் என்றும் தெரிந்தது.
நடந்து வந்திருந்ததால் பூமிக்கு மிகவும் நா வறட்சியாயிருந்தது. எதிர்ப்பக்கப் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் இஞ்சித் - துண்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து கரும்பு ஜூஸ் பிழிந்து