பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாயங்கால மேகங்கள்
27
 

வாங்கிக் குடித்தான் அவன். பரமசிவம் இன்னும் திரும்ப வரவில்லை.

தற்செயலாக அவன் மறுபடி நிமிர்ந்து லெண்டிங் லைப்ரரிப் பக்கம் பார்த்தபோது அங்கே சித்ரா ஓர் இளைஞனுடன் நின்று புத்தகம் தேடிக்கொண்டிருந்தாள். முருகேசன் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சித்ராவோடு நிற்கும் ஸ்ஃபாரி சூட் அணிந்த அந்த இளைஞன் யாரென்றுதான் பூமிக்குப் புரியவில்லை.

சித்ராவைப்போல் அந்த இளைஞனும் தனியாக லைப்ரரிக்கு வந்த வேறு ஒரு கஸ்டமராக இருக்கலாமோ என நினைக்கவும் முடியாமல் அவன் அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

பூமிக்கு அத்தனை தாகத்திலும் கரும்பு ஜூஸ் இரசிக்கவில்லை. ஐஸ் கட்டிகளோடு பாதி கிளாஸ் ஜூஸை அப்படியே மீதி வைத்தான் அவன். இன்னும் பரமசிவம் ஸ்வாகத்திலிருந்து திரும்பவில்லை.

4

ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னை விட அழுத்தமாக நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னே விட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திரக் குணங்களில் ஒன்றாயிருக்கிறது.


சித்ராவுடன் கூட யார் பேசவேண்டும், யார் பேசக் கூடாது, யார் பழக வேண்டும், யார் பழகக் கூடாது,