சாயங்கால மேகங்கள்
33
இவ்வாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின், டெலிவிஷனில் ‘படிக்கும் பழக்கம்’ கலந்துரையாடல் பார்ப்பதற்காகப் பரமசிவமும், பூமியும் கிளம்பிச் சென்றார்கள். கடையை’ முருகேசன் கவனித்துக் கொண்டான்.
அவர்கள் கருமாரி டி. வி. டீலர்ஸ் கடையில் போய் அமர்ந்தபோது, அங்கு ஏற்கனவே ஷோரூம் விளம்பரத்துக்காக ஒரு டெலிவிஷன் இயங்கிக் கொண்டிருந்தது.
டி , வி. விற்பனையாளர் நெற்றியில் பத்துக் காசு அளவு பெரிய குங்குமப் பொட்டுடன் உற்சாகமாகத் தோற்றமளித்தார். இவர்களை உற்சாகமாக வரவேற்றார்.
டி, வி. யில் யாரோ படு உற்சாகமாகக் கரும்பலகையில் அ. ஆவன்னா எழுதி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
“அனா, ஆவன்னாவையே இரண்டு வருஷமா விடாம நடத்தறாங்க..”
“நியாயந்தான்! மிகப் பல விஷயங்களிலே நாம் இன்னும் அனா, ஆவன்னா நிலைமையைக் கடந்து முன்னேறவே இல்லையே?”
“முன்னேற்றம் முற்போக்குன்னெல்லாம் பேசறவங்கள்ளாம் இப்ப உங்களை மாதிரி அரும்பு, மீசையும் கருகரு தாடியும் வளர்க்கிறீங்க! இல்லியா பரமசிவம் சார்?”
என்று டி. வி. விற்பனையாளர பரமசிவத்தை மடக்கினார்.
“தாடி மீசை வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகளோ என்று சாருக்கு நிரந்தரமாகவே ஒரு சந்தேகம் பூமி!” என்று
டெலிவிஷன் விற்பனையாரைச் சுட்டிக் காட்டிப் புன்னகை புரிந்தான் பரமசிவம்.
சரியாக இரவு எட்டு மணிக்கு டெலிவிஷனில் அந்த நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பூமிக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காந்திருந்தது. படிக்கும் பழக்கம் கலந்துரையாடலைத் தொடங்கியவளே சித்ராதான்!