பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும் அல்லது ஒரே வித மான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றி கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும்.


பூமி தானாக அப்படி நினைத்துக் கொண்டு பதறினானே ஒழிய சித்ராவோ, அவள் சிநேகிதியோ அப்போது அவனை ஒரு சாதாரண் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக நடத்தவில்லை, நண்பனைப் போலவே நடத்தினார்கள், சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினார்கள். தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புத்தகங்கள் தருகிற லெண்டிங் லைப்ரரிக்காரன்தானே என்பது போல் பரமசிவத்திடம்கூட அவள் அலட்சியமாகப் பழகவில்லை என்பதைப் பூமியே கவனித்தான்.

அதிகாலையில் இருள் பிரிவதற்கு முன்பாக ஏர்க்காடு எக்ஸ்பிரசில் வந்த ஒரு சவாரியை அன்று காலையில் அந்த வீட்டில்தான் இறக்கி விட்டதைப் பற்றி அப்போது சித்ராவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துத் தயங்கினான் பூமி.

அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த உரையாடலில் அதை வலிந்து கூறுவது இடைச் செருகலாகத்தான் இருக்கும் என்று அவனுக்கே தோன்றியது.

அப்போது, சித்ராவின் தோழி நர்ஸரி பள்ளிகளில் மாணவர்களிடம் நடக்கும் வசூல் கொள்ளையையும், ஆசிரியர்களுக்கு