சாயங்கால மேகங்கள்
53
புஷ்பங்கள், ரத்த நாளங்கள், புரட்சிக்கனல் என்று நாலைந்து வார்த்தைச் சேர்க்கைகள் அங்கங்கே அள்ளி தெளித்துத் தாளிக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர ஆழமாக எதுவும் இல்லை.
மிகவும் அரை வேக்காட்டுத் தனமானதும் மேலோட்டமானதுமான வெற்று ஆர்வம் மட்டுமே அதில் தெரிந்தது. உண்மையான, ஆழமான அழுத்தமான புரட்சிக்காரனுக்குத் தன்னை ஒரு புரட்சிக்காரனாக முன் நிறுத்திக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற சுய முனைப்பை விடப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய முனைப்பே அதிகமாக இருக்க வேண்டும். புரட்சிக்காரனை விடப் புரட்சிதான் முக்கியமானது. பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் சிலர் தாழ்வு மனப்பான் மையாலும், புதுப்புது ஃபேஷன்கள், வார்த்தைகளில் ஏற்படுகிற கற்றுக் குட்டித்தனமான காதலினாலும் சிலவற்றை ஆரம்ப சூரத்தனத்தோடு மோகிப்பது உண்டு. அது போலத்தான் புரட்சி மித்திரனின் தீவிர மோகமும் இருந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது புரட்சியின் மேல் இவர்களுக்கு ஏற்படுகிற திடீர் மோகத்துக்கும் அவசர ஆசைக்கும் கூடப் பொருந்தும். புரட்சியையும் சமூக மாறு தலையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்குவாதியைவிட அதைப்பற்றி அரை குறையாகவும், மேலோட்டமாகவும் மட்டும் தெரிந்த, நடுத்தர வர்க்கத்து முற்போக்குவாதியே மிகவும் அபாயகரமானவன் என்பது பூமியின் கருத்து ஆக இருந்தது.
“வாங்க சார்; லெட் அஸ் ஹேவ் ஸம் டீ” என்று பூமியையும் சித்ராவையும் தன்னுடன் அழைத்தாள் புரட்சி மித்திரன்.
அப்பர் சாமி கோயில் தெருவில், போதிய இடமில்லாததால் தன்னுடைய கப்பல் போன்ற சவர்லே இம்பாலா காரை இராயப்பேட்டை நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு வந்திருந்தான் புரட்சி மித்திரன்