பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாயங்கால மேகங்கள்
55
 

"ஒரு கண்டிஷன்! ஏ, ஸி, உள்ள ரெஸ்டாரெண்டா இருந்தா நல்லது.”

பூமிக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. இவனுடைய நாட்டில் புரட்சி வருவதாயிருந்தால் கூட ஏ. ஸி. செய்த இடத்தில்தான் அது வரவேண்டும் என்பான் போலிருந்தது.

சித்ரா அவளை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஒரு கோமாளியிடம் பழகுகிற மாதிரியே அவனிடம் பழகுகிறாள் என்பதைச் சிறிது நேரத்திலேயே பூமி அறிந்து விட்டான்.

அவர்கள் இருவரையும் தன் ஆட்டோவிலேயே அழைத்துச் சென்று ஒரு டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்த பின் மீண்டும் இம்பாலா நின்ற இடத்தருகே கொண்டு வந்து டிராப் செய்தான் பூமி. “புது வீட்டுக்குக் குடி வந்த பின் உங்களை அடிக்கடி பார்க்கலாம், பக்கத்துப் பேட்டையில் தானே இருக்கிறீர்கள்?” என்று புன்னகையோடு அவனை நோக்கிக் கை கூப்பினாள் சித்ரா.

8

எந்த முதல் தரமான நல்ல கலையும் மூன்றாந் தரமான மனிதர்கள் கைக்குப் போய்ச் சேரும் போது அங்கே அது வெறும் பாசாங்காகவும் போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது.


சித்ராவுக்கும் புரட்சி மித்திரனுக்கும் இருக்கும் நட்பு இப்போது பூமிக்கு எந்த விதத்திலும் கவலையளிக்கவில்லை, கேலிக்குப் பாத்திரமான விதூஷகன் ஒருவன் நடத்துவதைப் போலவே அவனை அவள் நடத்தினாள். சிறிது கூட மரியாதை