56
சாயங்கால மேகங்கள்
கலவாத ஒருமையில் ‘நீ, வா, போ’ என்றுதான் அவனைப்பேசினாள் அவள். அவனுடைய புதுக்கவிதை, புரட்சி, தீவிரம் எல்லாவற்றையும் கூட அவள் கேலிப் பொருகள்களாகவே கருதினாள். சிநேகிதமும் நெருக்கமும் இருந்தாலும் அவனது அரைவேக்காட்டுத் தனங்களை அவள் ஏளனமாகப் பார்ப்பது தெளிவாகவே தெரிந்தது.
தன்னிடம் அவள் பழகும் விதத்திற்கும் அவனிடம் அவள் பழகும் விதத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பூமியே தரம் பிரித்து உணர முடிந்திருந்தது. இதை வேறொரு நிகழ்ச்சியின் மூலமும் பூமி நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வாரக் கடைசியில் பாலாஜி நகரில் இருந்த ஓர் ஆங்கில மீடியம் நர்ஸரி பள்ளியின் திறப்பு விழா ஒன்றில் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் காணவும், ஒரு கராத்தே ‘டெமான்ஸ்ட்ரேஷனுக்கு’ ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பள்ளி நிர்வாகியின் மகன் ஒழிந்த நேரங்களில் பூமியிடம் கராத்தே கற்று வந்தான். அவன் மூலம் பூமி அந்த டெமான்ஸ்ட்டிரேஷனை செய்ய ஏற்பாடாகி இருந்தது, பூமியை அதற்காக அழைத்திருந்தார்கள் பள்ளி நிர்வாகிகள். ‘கராத்தே நிகழ்ச்சிகள்’ -- கரோத்தே வீரர் பூமிநாதன் என்று விழா அழைப்பிதழிலும் அவன் பெயரை அச்சிட்டிருந்தார்கள்.
இதற்கு முன்பும் இத்தகைய கராத்தே நிகழ்ச்சிகளைப் பொது விழாக்கள் சிலவற்றில் செய்து காட்டியிருந்ததால் இதற்கும் பூமி இசைந்திருந்தான். கைவிரல்களால் செங்கல் உடைப்பது, தலையால் செங்கல் உடைப்பது, சண்டை ஆகிய காட்சிகளைக் காண்பதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.
வெளிநாட்டுப் போர்க் கலைகளாக இருந்தும் கராத்தே, குங்ஃபூ ஆகியவை மக்களை அதிகம் கவர்ந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் விரைவும் துரித கதியுமே என்பதைப் பூமி நன்கு உணர்ந்திருந்தான். இந்தப் போர் முறைகளின் துரித கதி வேறு எந்தப் போர் முறைகளிலும் இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது. கராத்தே முறையின். கவர்ச்சிக்-