சாயங்கால மேகங்கள்
57
குக் காரணமே அதுதான் என்பதையும் அவன் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான். ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களைத் தவிரவும் மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் என்று கராத்தே பயில்வதில் ஆர்வமுள்ள ஒரு பெரியகுழுவே பூமியைச் சுற்றி இருந்தது. பூமி அந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்தான்.
நடு இரவில் டாக்ஸி ஆட்டோக்களில் இருவர் மூவராக ஏறிக் கொண்டு ஏதாவதொரு தனி இடம் வந்ததும் டிரைவரை அடித்து உதைத்து அன்றைய சவாரி வசூல் முழுவதையும் பறித்துக் கொண்டு போகும் சம்பவங்கள் நகரில் அதிகரித்து வந்தன.
இச் சம்பவங்களால் இளைஞர்களாகிய டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களிடையே கராத்தே கற்பதில் மிக விரைந்த ஆர்வமும், எழுச்சியும் ஏற்பட்டிருந்தன. தற்காப்புக்கும் அவசர உபயோகத்துக்கும் அது பயன்படும் என்பது அக்கலை இளைஞர்களைக் கவர்வதற்குப் போதுமானமாக இருந்தது.
இந்த பாலாஜி நகர் நர்ஸரிப் பள்ளியின் விழா அழைப்பிதழ் சித்ரா வேலை பார்த்த அருள்மேரி? கான்வெண்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கராத்தே வீரர் பூமிநாதன் என்று பார்த்ததுமே அது தனக்கு அறிமுகமான பெயராயிருந்ததை ஒட்டிச் சித்ராவின் ஆர்வம் அதன்பால் ஈர்க்கப்பட்டது.
நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு :அது நம்ம பூமியா அல்லது வேறு யாராவதா?” என்று லெண்டிங் லைப்ரரியில் பரமசிவத்திடம் விசாரித்தாள் சித்ரா.
“சந்தேகம் என்ன? நம்ம பூமியேதான். அவன் பெரிய கராத்தே நிபுணனாச்சே?” என்று சித்ராவுக்குப் பரமசிவம் மறுமொழி கூறினான்.
இதனால் சித்ராவும் அவள் தோழி தேவகியும் பூமியின் கராத்தே மொன்டிஸ்டிரேஷனைப் பார்ப்பதற்காக முன்