எந்த ஒருவிதமான இலட்சியமும் பிரக்ஞையும் இல்லாமல் வெறும் செலூலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
முத்தக்காளும் சித்ராவும் சற்றுத் தயக்கத்தோடும், பயத்தோடும் பூமியைத் தடுக்க முயன்று தோற்றனர். பூமி அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை.
“வாதங்களும், தர்க்க நியாயங்களும் காரண காரிய விளக்கங்களும் கயவர்களுக்கு ஒருபோதும் புரியாது. அடி உதை மட்டும்தான் அவர்களுக்குப் புரியும். நான் தவறு எதுவும் செய்யப் போவதில்லை. அவர்களுக்குப் புரிகிற மொழியில் அவர்களிடம் பேசப் போகிறேன்.”
“வேண்டாம் தம்பி! சமாதானமாக ஏதாச்சும் சொல்லி அவங்களைத் திருப்பி அனுப்பிடுங்க போதும்.”
“சமாதானம் என்பது இரண்டு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கௌரவப்படுத்தப் பெற வேண்டிய ஒன்று. ‘சமாதானம்’ என்பதே கோழைத்தனம் என்று நினைக்கிற முரடர்களிடம் அதைப் பேசிப் பயனில்லை முத்தக்கா!”
“சண்டை கலவரம்னு கடைப்பேரு வீணாக் கெட்டுப் போகுமேன்னு நினைக்கிறேன்.”
சா-5