சாயங்கால மேகங்கள்
75
கிய ஒருவர் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வை அவள் அடைந்தாள். அப்போது உடனே ஓடிப் போய்ப் பூமியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
சுயநலமும், சுரண்டலும், வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்யமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை.
பூமி கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் பார்த்து அவள் பதறிப் போனாள். ஒரு வேளை இரவில் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைப் போலீஸார் கூட்டி கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள் அவள். என்ன நடந்தது என்ற விவரங்களை யாரிடம் கேட்பது என்றே அவளுக்குப் புரியவில்லை. உடனே புறப்பட்டுப் போய் பூமியின் வீட்டருகே விசாரிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.
லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி வீட்டிற்குத் தேடிப் போய் விசாரிக்கலாம் என்றால் முந்திய இரவு லஸ் கார்னரில் நடந்ததெல்லாம் அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அரை நாள் லீவு எழுதி தேவகி மூலம் பள்ளிக்குக் கொடுத்தனுப்பி விட்டுப் பூமியின் வீட்டருகே போய் விசாரித்தால்தான் ஏதாவது விவரம் தெரிய முடியும் என்று பட்டது.
உடனே லீவு லெட்டர் எழுதித் தேவகியின் வீட்டில் போய்க் கொடுத்து விட்டு அப்பர் சாமி கோயில் தெருப் பக்கம் விரைந்து வீரப் பெருமாள் முதலி தெரு சந்து பொந்துகளில் பூமியைத் தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் யாராவது எதிர்பட்ட மாட்டார்களா என்று தேடி அலைந்தாள் அவள்.