பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சாய்ந்த கோபுரம்



சீற்றத்திற்கிரையாய் சிரம் அற்று வீழ்ந்த அதிமேதைகளின் வரலாறுகள், இவ்வளவு அதிசய மனிதர்கள்! இத்தனைக் கோடி அதிசயப் பொருள்களும் உலகில் உண்டா என்று பிரமித்துப் போகும் அதிசயப்பொருள்கள். உலகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்ட பொருள்கள். பல்வேறு கடல்களின் நீர் மட்டத்திலிருந்து அடிவாரம் வரையுள்ள எல்லா உயிரினங்களும், அதிசயப் பொருள்களும் கொண்டு தந்து குவிக்கப்பட்டிருக்கும். விலைக்கு வாங்கும் பொருளைவிட, வேடிக்கை பார்க்கத் தகுந்த பொருள்களே அதிகமாக இடம் பெற்றிருக்குமாம். ஒரு நாள் பார்த்ததை மறுநாள் பார்க்க இயலுமா என்பதும் சந்தேகம்தான். இந்த நிலையில் அகில உலக மக்களின் ஆசையைத் தூண்டும் கண்காட்சியைக் பாட்டும் சிட்னிக்கு 1930-வது ஆண்டு எல்லாரும் அதிசயிக்கத் தகுந்த அதிசயம் ஒன்று கிடைத்தது. மாலை நேரம் அதுவரை யாருமே பார்த்தறியாத மின்சார விளக்குகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் எரியவில்லை. அதுவரை அங்கே இருந்த சாதாரண விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டன. இருள் நெருங்கும் நேரம். இன்னும் கொஞ்ச நேரத்தில் மின்சார விளக்குகள் எரியும் என்று அறியக்கின்றான் கண்காட்சியின் அமைப்பாளன். எல்லாரும் அவைகளைப் பார்த்தவண்ண மிருககின்றனர் இமைகொட்டாமல். சில சந்தேகப் பிராணிகள், ஏதோ இந்தக் கண்காட்சிக்காரன் நமக்குக் கண்கட்டி வித்தையைக் காட்டுகிறான், பணத்தைச் சம்பாதிக்க பக்குவமான திட்டம் தீட்டு-