பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

9



வனிதையர் உட்பட. ஆனால், தொடாதே! அபாயம்! என்ற எச்சரிக்கைப் பலகைகள் எங்கு பார்த்தாலும் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அறியாமையாள், ஆநந்தத்தால், ஆர்வத்தால், அதிசய காந்தத்தால் இழுக்கப்பட்டு அதைத் தொட்டோர் அந்த இடத்திலேயே மறந்துவிட்டனர் உலகத்தை. இருள் ஓடி ஒளிந்தது. எங்கும் ஜோதிமயம். அதுவரை அவ்விளக்குகளை மக்கள் பார்க்கவில்லை யாகையால், அந்த ஒளிச்சுடரில் தங்கள் கண்ணொளியைப் பறிகொடுத்துவிட்டனர் சிறிது நேரம். ஒரே ஆரவாரம் அன்று தொடங்கிப் பல நாட்கள் பகலைக்காட்டிலும் இரவில் மக்கள் அதிகமாகச் சேரத் தொடங்கினர். பல வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் வந்தவண்ணமிருந்தன. இந்த அதிசயத்துக்கு முன்னால், நமது கதைக்குரிய பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் அதிசயம் ஒன்றுமில்லாமலாய்விட்டது இன்று. ஆனால் அன்று, மேலும் நமது ஆராய்ச்சி அந்தச் சாய்ந்த கோபுரத்தை மையமாக வைத்து எழவில்லை. அது அதன் சரிவிலே இருக்கும் சமாதியிலடங்கிய ஒப்பற்ற வீரனைப்பற்றியதாகும்.

ரோம்

கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாடிலும், உலகியல் ஞானி. கலீலியோவும் உலகின் இழுக்கும் சக்தியைப் பரிசோதித்த இடம். அது ரோம் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிய இடம். அது கிருஸ்துவ மதப் பூங்கா.