பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

11


கோடியிலே ஒரு துருப்பிடித்த ரோம ஏகாதிபத்தியத்தை உண்டாக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி மூக்கறுபட்டு முடிந்துபோன முசோலினி நடமாடிய இடமும் அது. சீர்திருக்கக் கொள்கைகளைச் சொல்லியதற்காக தூக்குத் தண்டனையடைந்து மாண்டு போன சவனரோலா என்ற பகுத்தறிவுவாதி வாழ்ந்த பார் அது. கேவோர், கரிபால்டி போன்ற அரசியல் புரட்சிக்காரர்களும், மகாகவி தாந்தே போன்றவர்களும் வாழ்ந்து வீழ்ந்த சரித்திரப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டில் உள்ள அந்தப் பைசா நகரச் சாய்ந்த கோபுரச் சரிவிலே ஓர் சமாதி.


எடுத்துக்காட்டு

அது, புதுயுகங்கான விரும்புவோருக்கு ஒர் படிப்பினை. எடுத்துக்கொண்ட வினையில் எள்ளளவும் பின்வாங்காதவர்களுக்குச் சிறக்க எடுத்துக்காட்டு. மனிதனுடைய பண்பு உழைப்பு, இயற்கையாக அமைந்துள்ள ஆற்றல் ஆகிய இவைகளே வெற்றிக்கு வழிகோலுவன. எகைச் செய்தாலும் அதில் உள்ளத்தைப் பதியவைத்து உறுதியோடு செய்யவேண்டும். எடுத்துககொண்ட வேலை எவ்வளவு சிறிதாக இருக்காலும் அதனை உண்மையோடு செய்யவேண்டும் என்று உறுதியில் தளராதிருப்பவர்களுக்கு அந்தச் சமாதி ஒர் எடுத்துக்காட்டு. “மனிதனுக்கு வரும் நோய்களில் எல்லாம் மிகக் கொடிய மோசமான நோய்பயம் என்பதே” என்ற அறிஞர்கள் மூதுரைக்கு இலக்காக அமைந்திருப்பது அந்தச் சமாதி.