பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சாயந்த கோபுரம்


“ஒருவன் எப்போதும் வீரனகவே வாழ முடியாது. ஆனால் என்றென்றும் மனிதனாக வாழ முடியும்” என்ற கதேயின் அறவுரைக்கு ஒர் எடுத்துக்காட்டு அந்தச் சமாகியில் சலனமற்ற தூக்கத்திலாழ்ந்திருக்கும் வீரன் மாஜினியின் வாழ்க்கையில் ஏற்ற சோகமிக்க சம்பவங்கள்.

அந்தச் சமாதியைக் காணும்போது ஆத்திரப்படுவோர்கள் பழமை விரும்பிகள். அடக்க முடியாத வேதனையால் உள்ளங் குமுறி கண்களிலே நீர்க் கொப்பளிக்க நிற்பர் புதுயுகங்கான விரும்புவோர். மன்னன் சீற்றத்துக்கஞ்சாது எண்ணிய எண்ணத்தைப் பல எதிர்ப்புகளுக்கிடையே காட்டிக் தன் கருத்தை நிலைநாட்டிய கர்மவீரன் இவன் தான் என்பர் மறுமலர்ச்சி விரும்புவோர். உயிரின் உயர்வறிந்தும் உள்ளத்தை உள்ளவாறே உணர்த்திய உத்தமன் இவன்தான் என்பர் நேர்மையில் நாட்டங் கொண்டோர்.


தோன்றினான்

1805-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி ஜினோவா என்ற இடத்தில் பிறந்தான் மாஜினி. அன்று, இவன் இதாலியின் சுந்திரத்தைக் காணப் பிறந்தவன் என்று யாருக்குத் தெரியும்? இரண்டு முறை மரணதண்டனை அடையப் போகின்றான் என்று எந்தச் சோதிடரும் சொல்லியிருக்கவில்லை, மகன் கொள்ளைக்காரனாய், கொலைக்காரனாய், ஊதாரியாய் அரசாங்க வைரியாய் இருப்பான்