பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சாயந்த கோபுரம்


கள் எதுவுமே தோன்றவில்லை மாஜினியின் பிறப்பில்.

அடிமைத்தன்மை, யுத்தம், வறுமை, அறியாமை இவற்றில் எதை ஒழிக்க நாம் பாடுபட்டாலும் வலிவுள்ள பல பேருடைய எதிர்ப்பையும், பகைமையையும் நாம் பெற வேண்டியிருக்கும், ஆகவே செயலற்றுக் கிடப்பதே மேல் என்று அவரவர்கள் சொந்த காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த காலத்தில், அந்த மக்கள் மத்தியிலே ஒரு நடுத்தரக் குடும்பத்திலே பிறந்தான் மாஜினி என்பதுதான் உண்மை.

இலக்கியக் கர்த்தா


இலக்கிய சம்பந்தமாகப் பல கட்டுரைகளை வெளியிட்டான். அந்தக் கட்டுரைகள் எதிலும், இவனைப் போர்ப்பாதைக்கிழுத்துச் செல்லும் புகை கிளம்பவில்லை. இங்கிலாந்தின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு இவன் கட்டுரைகள் இன்றளவும் மிகப் பயன்பட்ட வண்ணம் உள்ளன. அகில ஐரோப்பிய இலக்கிய சங்கங்கள் எதிலும் இவனுடைய தெளிந்த கருத்துப் பொதிந்த, சுவைமிக்க, ஆராய்ச்சிக்குகந்த கட்டுரைகளைக் காணலாம். வரையறுக்கப்பட்ட வயதுக்குச் சற்று முன்பே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சட்டம் படித்துப் பட்டம் பெற்று 1826-ல் சட்ட நிபுணனானான். இவனுக்கிருந்த மதி நுட்பம், சுருசுருப்பு, வாக்குவன்மை, விவாதத்திறமை ஆகியவற்லைக் கண்ட மாணவர்கள் இவனிடம்