பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

15


அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொண்டனர்.

ஆனால், இன்று யாரும் அணுகமுடியாத ஆட்சியாளரின் அடக்குமுறை நெருங்க முடியாத, தடியடியும் துப்பாக்கியும் தன்னைக் காக்க முடியாத எல்லையற்ற தூரம் சென்றுவிட்டான். அவனை இன்று யாரும் கல்லால் அடிக்கப்போவதில்லை. காரணம் அவன் கல்லறையிலே புகுந்துவிட்டான். சட்டங்கள் அவனை யணுகாது, ஏனெனில் சடலத்தைச் சமாதியில் மறைத்துவிட்டான். பழிச்சொற்களை அவன் காதுகள் ஏற்காது. ஏனென்றால் பாபிகள் நிறைந்த இப் பாரைக் கடந்துவிட்டான். ஆனால் இவைகளைக் காட்டிலும் கொடிய தண்டனைகளை அடைந்தடைந்து நெஞ்சத்தை எஃகுவாக்கிக் கொண்டவன் தான். அரசாங்கம் தோண்டியிருந்த எவ்வளவோ பயங்கரப் படுகுழிகளை எல்லாம் தாண்டிக் குதித்துக் தப்பித்துக்கொண்டவன் தான். பலநாள் படுக்கையிலே கிடக்கும் பழைய நோயாளி ஒரு மருத்துவனைவிடக் கெட்டிக்காரன் என்பதைப் போல், பல நாட்கள் அடக்கு முறைகளைத் தாங்கித் தாங்கி, பலமுறை நாட்டை விட்டு ஓடியோடி ஒரு தெளிந்த அரசியல் ஞானியாய் விட்டான்.

மமதை

அதிகாரமமதையால் ஆளும் அரசர்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் தேடித்தந்த சொத்துக்கள் இந்த ஆணவம் நிறைந்த அதிகார