பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

13


தன் மகனைக் கொலைசெய்த கொடியவனைக் கொலை செய்ய எத்தனித்தான் என்ற குற்றத்திற்காகச் சிறையிலே 10 ஆண்டுகள் தள்ளப்பட்டிருக்கின்றான். அந்தோ ! அங்கே ஒருவன் வயிற்று வலியால், ஐயோ! ஐயோ! என்று அவஸ்த்தைப்படுகிறான். சிறைகாப்போன் அயர்ந்து தூங்குகின்றான். அவன் படுத்திருக்கும் இடத்தில் கொசுக்களுமில்லை, மூட்டைப்பூச்சிகளுமில்லை. வண்டுகள் பறந்துவந்து அவனை வாட்டவுமில்லை. அவ்வளவு பாதுகாப்போடு உறங்குகின்றான். நாம் இருக்கும் இந்த அறையைச் சுற்றிப்பார்த்தால் கொசுக்கள், அதைவிட அதிகமான எண்ணிக்கை மூட்டைப்பூச்சிகள், அந்த அளவுக்குச் சற்றேறக் குறைய வண்டுகள். நாளை காலை தூக்குத் தண்டனையடையப் போகும் குற்றவாளியின் துடி துடிப்பு அவனை வந்துவந்து பார்த்துச்செல்வோரின் பரிதாபக்குரல், இவ்வளவுக்குமிடையே நாம் இருக்கிறோம். நாளை நமக்கு என்ன வேலையோ ? செக்கிழுக்க வேண்டுமோ, கல்லுடைக்கவேண்டுமோ, எதுவரினும் வரட்டும் என்று ஆறுதலடைந்து கிடைத்த நேரத்தை உருவான திட்டம் தீட்டப் பயன்படுத்திக்கொண்டான். அளவு கடந்த துக்கத்தால் அருமையான கருத்துக்களை விட்டுவிடுவோம். ஆர்வமிகுதியால் கடமையை மறப்பவர்களும் உண்டல்லவா? அதைப் போன்றவனல்ல மாஜினி, அவன் அளவு கடந்த பகுத்தறிவு படைத்தவன் மாத்திரமல்ல. அதைப் பல்கலைக்கழகத்தில் நிறைபோட்டுப் பார்த்தவன்.