பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சாய்ந்த கோபுரம்


சொன்னதைக்கேட்டுத் தலையசைக்கும் சிறு குழந்தையல்ல. அவன் ஆட்டினால் ஆடும் விசை வைக்க பொம்மையுமல்ல, அவன் அகண்ட உள்ளக் கடலில் சிந்தனே'அலைகள் ஓயாது மோதிக்கொண்டிருக்கும். சில நேரம் அவன் சிந்தையில் கெளிவின் ஒளி தோன்றும். வானம் மின்னி அதிரும்போது ஒரு பயங்கர உணர்ச்சி தோன்றுவதைப்போல ஒர் உணர்ச்சி தோன்றும். மக்களுக்கு முன்னேற்றப் பாதையைக் - காட்டத் துடியாய்க் துடிப்பன். கரைகாணாது தத்தளிக்கும் நாவாய்க்கு ஜி வி ஒர் கலங்கரைவிளக்கம்போல் நிற்க எண்ணினான். தனது மனதில் பழைய நம்பிக்கை குடி கொண்டிருக்கும் வரையில், பூரணமாக உணரும் சக்தியோ, சுதந்திர எண்ணமோ இடம் பெறாது என்றறியாக மக்களை எப்படிக் தட்டி எ ழு ப் புவது என்ற ஆராய்ச்சியிலேயே நேரத்தையும் கினைப்பையும் செலுத்தினன். கழிந்துபோன நாட்களைப்பற்றி வருந்தாமல், எதிர்காலத்தைப்பற்றி அஞ்சாமல், இன்று செய்யும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டுமென்ற தத்துவத்தை அறியாக மக்களைக் கண்டு கலங்கினான்.

எண்ணம்

-ஆகவே தன்னாலியன்றவரை மக்களைத் கன் பால் இழுக்க, அன்றுவரை வேற்று நாட்டாருக்கு அடிமைப்பட்டிருக்கும் அவல நிலையைக் களைக் தெறிய எவ்வளவோ கஷ்டங்களைச் சகிப்புத்தன்மை