பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சாய்ந்த கோபுரம்



அவர்கள் அன்றாட வேலைகளுக்கே அடிமையாய் விட்டார்கள். ஒன்று முதல் பன்னிரண்டுவரை ஓயாது வளைந்து சுற்றும்காலக்கருவியின் (கடிகாரம்) கைகளைப் போன்றவர்கள். புதுயுகங் காண மனமில்லாத அப்பாவிகள். இவர்களிடம் பேசுவது எழுதிய சித்திரத்தோடு பேசுவதற்கொப்பாகும்,மெளனமுடிவு கொண்டான்.அமைதி, ஒரு பெரிய அதிர்ச்சிக்கு அஸ்திவாரம் என்ற உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதைப்போல், மாஜினி தன் ஓயாத பேச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

மனித ஜி வா தா ர மா ன உரிமைகளே எங்கேயோ யாரும் காண மு டி யா த புதைபொருளாக்கி விட்ட புல்லர்களின் செய்கையை எண்ணுவான். ஒன்று தியளும் மக்கள் சக்தியைப் பகுத்தறிவு என்ற உலேக்கூடத்தில் பழுக்கக் காய்ச்சி, அக்கிரம அரச பீடத்தின் மேல் இழுத்தால் என்ன வென்று எண்ணினன் மாஜீனி.

'குதிரைக்குட்டியைச் சவாரிக்கும், காளையை வண்டிக்கும் பழக்குவதற்கு ஆட்கள் எளிதிற் கிடைப்பார்கள். ஆனல் மனித உரிமையை, தேசத்தை ஆள்வோரின் கடமை முதலியவற்றை நிர்ணயிப்பதற்கான திறமையையும், அறிவையும் இளைஞர்கட்குப் புகட்டி, அவர்களே நல் வழியில் செலுத்தவல்ல மேதாவிகளைக் காண்பது அரிது.” என்று அறிஞன் சாக்ரடீஸ் சொல்லியதைப்போல்,